ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா: ஒருநாளில் 21,058 பேர் பாதிப்பு; 791 பேர் பலி
ரஷியாவில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 791 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 791 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,84,531 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 2,142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாஸ்கோவில் பாதிப்பு 15,49,386 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கரோனாவால் மேலும் 791 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,73,700 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,36,841 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 24,017 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,63,054 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது ரஷிய அரசு.