முகப்பு
உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 903 பேர் பலி; புதிதாக 30,671 பேருக்குத் தொற்று

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 903 பேர் பலியாகினர். 

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 12:31 PM
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 903 பேர் பலியாகினர். 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  

பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 903  பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,76,645 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 30,671 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,06,45,537 ஆக அதிகரித்துள்ளது. 1,95,77,135 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.