நைஜீரியா : சிறையைத் தகர்த்து 240 கைதிகள் தப்பியோட்டம்
நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் இருக்கும் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்-12) இரவு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.
நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் இருக்கும் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்-12) இரவு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.
இரவில் கெப்பா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் 240 கைதிகளை தப்பவைத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : ஊழல் புரிந்த 470 அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Advertisement
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராஃப் அரெக்பசுலோ ,’ தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை ’இண்டெர்பொல்’ அமைப்பிடம் சமர்ப்பித்திருக்கிறோம் . ஒருவேளை நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. கெப்பா சிறைச்சாலையில் இருந்த 294 கைதிகளில் 224 பேர் விசாரணைக் கைதிகளும் 70 குற்றவாளிகளும் இருந்தனர்’ எனத் தெரிவித்ததோடு இத்தாக்குதலில் ஈடுபட்டு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி இரண்டு காவலாளிகளையும் கொன்ற தீவிரவாதிகளை உடனடியாக கைது செய்வோம் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அடையாள்ம் தெரியாத தீவிரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 1,800 கைதிகளை தப்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.