ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் பலி(விடியோ)
ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.
பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வழக்கம்போல் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று வந்தன.
அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இதுவரை 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 6க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும், சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே குதித்ததில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.