மூட்டை சிமெண்ட் விலை ரூ. 2,350, இலங்கையில்! 
உலகம்

மூட்டை சிமெண்ட் விலை ரூ. 2,350, இலங்கையில்!

இலங்கையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ. 500 உயர்த்தப்பட்டுத் தற்போது ரூ. 2350 ஆக விற்கப்படுகிறது.

DIN

இலங்கையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ. 500 உயர்த்தப்பட்டுத் தற்போது ரூ. 2,350 ஆக விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு மார்ச் 31 இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சிமெண்ட் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த விலை உயர்வு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, கடந்த மார்ச் 13 ஆம் தேதி ரூ. 1,350 ஆக இருந்த சிமெண்ட்  மூட்டையின் விலையை ரூ. 500 உயர்த்தி, ரூ. 1,850 என விற்கத் தொடங்கினர்.

கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையில் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"லாட்டரி ஜெயித்துவிட்டீர்கள்!" மோசடியாளர்களின் புதிய SCAM! | Cyber Security | Cyber Shield

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

SCROLL FOR NEXT