உலகம்

ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம்

ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே  இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது. 

DIN

மாஸ்கோ: ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே  இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது. 

இதுகுறித்து ரஷிய அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸின் புவி இயற்பியல் ஆய்வின் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளதாவது:

ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே சிமுஷிர் தீவின் தென்மேற்கே இருந்து வடக்கே 119 கிலோ மீட்டர் தொலைவில் (சுமார் 74 மைல்) 103 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 5:19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT