உலகம்

இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே ராஜிநாமா

DIN


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலகியிருப்பது, இலங்கை அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இந்தளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே 1 முதல் இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்புகளை வகித்து வரும் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அறிவித்துள்ளார்.

உணவுப் பொருள்களுக்காக இலங்கை மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிப்பதாக தனது ராஜிநாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT