உலகம்

ஜெர்மனியில் 87 முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் கைது

ஜெர்மனியில் 87 முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

ஜெர்மனியில் 87 முறை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஜெர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கரோனா தடுப்பூசி மையங்களில் அடுத்தடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாள் ஒன்றுக்கு 3 முறையும் இதுவரை 87 முறை அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பலரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்காக இவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT