முகப்பு
உலகம்

'இலங்கை அமைச்சரவை ராஜிநாமா மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி'

மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜிநாமா செய்திருப்பது மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஏப்ரல், 2022 at 3:55 PM
'அமைச்சரவை ராஜிநாமா மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி'
பகிர்:


கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜிநாமா செய்திருப்பது மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

ஒரு அற்புதமான நாடகம், இந்த நாட்டு மக்களை முட்டாளாக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த சமூகத்துக்கு நல்லது செய்யவோ, நாட்டு மக்கள் அனுபவிக்கும் இன்னல்களிலிருந்து மீட்கும் நேர்மையான முயற்சியாக இது தெரியவில்லை. இது மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்ற ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் சஜித் பிரேமதாசா கூறினார்.

நாங்கள் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.