உலகம்

கடும் வீழ்ச்சி: கொழும்பு பங்குச் சந்தையில் அரை மணி நேரம் வர்த்தகம் நிறுத்தம்

DIN

இலங்கையில் திங்கள்கிழமை காலை பங்குச்சந்தை தொடங்கியவுடனேயே கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அரை மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இலங்கை அரசைக் கண்டித்து மக்களிடையே போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 36 மணி நேர ஊரடங்கும் திங்கள் காலையுடன் முடிவுக்கு வந்தது. 

இலங்கையில் மக்களின் நிலை கண்டு பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைய அதிபர் கோத்தபய ராஜபட்ச நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியில் உள்ளது. 

திங்கள்கிழமை காலை பங்குச்சந்தை தொடங்கியவுடனேயே கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

முந்தைய நாளைவிட 5% க்கும் அதிகமாக அதாவது 5.9% வரை பங்குச் சந்தை குறியீட்டெண்(S&P SL20) வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகம் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் சற்று ஏற்றத்தை அடுத்து, 11 மணிக்கு மேல் பங்குச்சந்தை வணிகம் தொடங்கியது. ஞாயிறு இரவு இலங்கையின் அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்ததே பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT