உலகம்

கோத்தபய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

DIN

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து 26 அமைச்சர்களும் பதவியை ராஜிநாமா செய்து, நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதால், இலங்கை அரசில், சமுதாய உள்கட்டமைப்பு இணை அமைச்சர் பதவியையும் ஜீவன் தொண்டமான் ராஜிநாமா செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில், அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT