உலகம்

இலங்கை அதிபர் பதவி விலக மாட்டார்: அரசு கொறடா அறிவிப்பு

DIN

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக மாட்டார் என்று அரசு கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புதன்கிழமை அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், காபந்து அரசில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா். ஆனால், எதிர்க்கட்சிகள் அழைப்பை ஏற்க மறுத்தது.

இச்சூழலில், நேற்று அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக 41 எம்.பி.க்கள் அறிவித்துள்ளனா். அவா்கள் இனி நாடாளுமன்றத்தில் சுயேச்சைகளாகச் செயல்படவுள்ளனா்.

இதையடுத்து, இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் கூடிய நிலையில், எந்த சூழலிலும் அதிபர் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யமாட்டார் எனவும், பிரச்னையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அரசுக் கொறடா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT