முகப்பு
உலகம்

வடக்கு உக்ரைனில் இருந்து முழுமையாக வெளியேறிய ரஷியப் படை: பிரிட்டன் தகவல்

வடக்கு உக்ரைனில் இருந்து ரஷியப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக பிரிட்டன் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

வடக்கு உக்ரைனில் இருந்து ரஷியப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக பிரிட்டன் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. 

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. 

ஒவ்வொரு பகுதியாக ரஷியப்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வடக்கு உக்ரைனில் இருந்து ரஷியப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

அடுத்ததாக ரஷியப் படையினரின் ஒரு பகுதி கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதிக்குச் செல்லலாம் என்றும் ரஷிய வீரர்களை கிழக்குப் பகுதியில் நிலைப்படுத்த ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →