உலகம்

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 30 பேர் பலி

DIN

கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர். 

கடந்த 43 நாட்களாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகின்றது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருவதால் இரு நாடுகளுக்குமிடையேயான போர் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமடெர்க்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியா 2 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

SCROLL FOR NEXT