உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள போரோடியங்கா நகரில் ரஷியப் படையினர் நடத்திய தாக்குதலில் உருகொலைந்து கிடக்கும் கட்டடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுகிற்தி உக்ரைன் அரசு வழக்குரைஞர் இரினா வெனெடிக்டோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதலில் போரோடியங்காவில் உருகொலைந்து கிடக்கும் இரண்டு கட்டடங்களுக்கு அடியில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தேடுதல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ரஷியப் படைகள் நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பு வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளாார்.
மேலும் புச்சா நகர தாக்குதலை விட தலைநகர் கீவ் அருகே உள்ள போரோடியங்கா நகரில் ரஷிய படையினர் நடத்திய தாக்குதல் கொடூரமானது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
உக்ரைன் துறைமுக நகரான மரியுபோலில் பொதுமக்களில் 5 ஆயிரம் போர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களை குறிவைத்தது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.