உலகம்

பிரிட்டன் பிரதமரை சந்தித்த உக்ரைன் அதிபர்

DIN

கடுமையான போர் சூழலுக்கு மத்தியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் மீது 40க்கும் மேற்பட்ட நாளாக ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இருதரப்பினரிடையேயான போர் உலகின் பல நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். பிரிட்டனுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது ரஷியத் தாக்குதல்கள் மற்றும் உலக நாடுகளின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் விளாதிமீர் புதினின் இரு மகள்கள் மீது முதல்முறையாக தனிப்பட்ட புதிய தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT