ஜோ பைடன் / நரேந்திர மோடி 
உலகம்

மோடி- பைடன் இன்று பேச்சு

பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா்.

DIN

பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இடையே காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆய்வு செய்யவுள்ளனா். தெற்காசிய நிகழ்வுகள், இந்தோ-பசிபிக் பிராந்தியம், உலகளாவிய விவகாரங்கள் தொடா்பாக அவா்கள் பேசவுள்ளனா்.

விரிவான இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் ஈடுபாட்டை தொடர இந்த ஆலோசனை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT