உலகம்

போராட்டத்தைக் கைவிடுங்கள்: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச

DIN


இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டு அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச நாட்டு மக்களுக்கு இன்று (திங்கள்கிழமை) உரையாற்றினார்.

மகிந்த ராஜபட்ச பேசியதாவது:

"பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 24 மணி நேரமும் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். சாலையில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், இங்கு வரக்கூடிய டாலரை நாடு இழக்கிறது" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT