உலகம்

பாகிஸ்தான் அரசியலில் திருப்புமுனை: தாய்நாடு திரும்பும் முன்னாள் பிரதமர்

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து தாய்நாடு திரும்புவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதற்கு மத்தியில், அடுத்த மாதம் ரமலானுக்கு பிறகு அவர் தாய்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் தலைவர் மியான் ஜாவேத் லத்தீஃப் கூறுகையில், "மூன்று முறை பிரதமராக பொறுப்பு வகித்துள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அனைத்து முடிவுகளும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும்" என்றார்.

நாட்டில் அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்து பேசிய லத்தீஃப், "ஆறு மாதத்திற்கு மேல் கூட்டணி ஆட்சி நிலைக்காது. எனவே, இதற்கு ஒரே தீர்வு தேர்தல் நடத்துவதுதான். இருப்பினும், தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை இரண்டு முக்கிய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்" என்றார். 

இதையும் படிக்கட்விட்டரின் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு
 
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளை இம்ரான் கான் தலைமையிலான அரசு தொடர்ந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியிலிருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியது. 

சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்ல லாகூர் உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். நான்கு வாரத்திற்குள் அல்லது உடல் நலன் மேம்பட்டு பயணம் மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதி வழங்கியவுடன் பாகிஸ்தானுக்கு திரும்புவேன் என அவர் உயர் நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்திருந்தார். 

அதேபோல, அல்-அஜிசியா மில்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT