முகப்பு
உலகம்

ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக தடைகளை விதித்தது ஆஸ்திரேலியா

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 14 ரஷிய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 14 ரஷிய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 50 நாளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷியப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் மீது ரஷியப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்தது

இந்நிலையில், போரைத் தொடுத்த ரஷியா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியிலான தடைகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது  14 ரஷிய நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதிப்பதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் தொடர்பான நிறுவனங்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →