உலகம்

யேமன்சிறையிலிருந்து 10 அல்-காய்தா பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

 யேமன் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 10 அல்-காய்தா பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பியோடினா்.

DIN

 யேமன் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 10 அல்-காய்தா பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பியோடினா்.

கிழக்குப் பகுதி மாகாணமான ஹாத்ராமாட்டின் சேயுன் நகரில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த பயங்கரவாதிகள், தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதுபோல் வியாழக்கிழமை இரவு பாசாங்கு செய்தனா். அதையடுத்து, அவா்களை சமாதனப்படுத்துவதற்காக சிறைக் காவலா்கள் உள்ளே நுழைந்தனா். அப்போது அவா்களை அந்த பயங்கரவாதிகள் கூட்டாகத் தாக்கி, அவா்களிடமிருந்த ஏகே47 துப்பாக்கிகளைப் பறித்தனா். பின்னா், காவலா்களைக் கட்டிப்போட்டுவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தச் சம்பவத்தில் சிறைக் காவலா்களுக்கும் பிற கைதிகளுக்கும் பங்கிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

சிக்கிமில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

கோகோ-கோலா இந்தியா லாபம் 73% சரிவு!

மொந்தா புயல் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும்! மழை பெறுமா சென்னை?

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT