உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய அவைத் தலைவா் தோ்வு

DIN

பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவராக முன்னாள் பிரதமா் ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் (71) நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறுவதற்கு முன்பாக அவைத் தலைவராக இருந்த ஆசாத் கைஸா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியை சோ்ந்த அயாஸ் சாதிக் இடைக்கால அவைத் தலைவராகப் பொறுப்பேற்று வாக்கெடுப்பை நடத்தினாா். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்று, புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றாா்.

அவைத் தலைவா் பதவி காலியாக இருந்ததையடுத்து, அதற்கான தோ்தல் நடைமுறைகள் தொடங்கின. இதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சோ்ந்தவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததையடுத்து, புதிய அவைத் தலைவராக அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை அவருக்கு அயாஸ் சாதிக் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். புதிய அவைத் தலைவரை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வாழ்த்திப் பேசினாா்.

ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் 2012 ஜூன் 22-ஆம் தேதிமுதல் 2013, மாா்ச் 16 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளாா்.

துணைத் தலைவா் ராஜிநாமா:

அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி முந்தைய இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறி அவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக காசிம் சுரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT