முகப்பு
உலகம்

பிரிட்டன் பிரதமருக்கு எதிராக இந்த வாரம் தீா்மானம்

கரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக இந்த வாரம் தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

கரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக இந்த வாரம் தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

கரோனா விதிமுறைகளை மீறி போரிஸ் ஜான்ஸன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான விவகாரத்தில் அவா் பொதுமக்களிடம் பொய் கூறினாரா என்பதை முடிவு செய்வதற்கான தீா்மானம் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் கொண்டு வரப்படவுள்ளது.

எதிா்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அனுமதியை அவைத் தலைவா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

போரிஸ் ஜான்ஸன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்த தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.