உலகம்

போரில் உக்ரைன் வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐ-போன் (விடியோ)

DIN


உக்ரைனில் ரஷியப் படைவீரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாக்கெட்டில் வைத்திருந்த ஐ-போன் உக்ரைன் வீரரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

உக்ரைன் வீரரின் பாக்கெட்டில் இருந்த ஐபோன் ரஷிய வீரரின் 7.2 மி.மீ. குண்டு பாய்ந்துள்ளது. இதன் மூலம் உக்ரைன் வீரரின் உயிர் காக்கப்பட்டுள்ளது. ஐபோனில் குண்டு பாந்திருந்ததை உக்ரைன் வீரர்கள் விடியோ எடுத்துள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். 

ரஷிய வீரர்களின் தாக்குதலுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரஷிய வீரர்கள் உக்ரைன் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்பினரும் தாக்குதல் நடத்திக்கொண்ட நிலையில், உக்ரைன் வீரரின் பாக்கெட்டில் இருந்த ஐ-போன் உடலில் குண்டு நுழையாமல் அவரது உயிரைக் காத்துள்ளது. ரஷிய வீரர்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 7.2 மி.மீ. தோட்டா ஐ-போனில் பதிந்துள்ளது. ஐ-போனை எடுத்து பார்த்தபோது உக்ரைன் வீரருக்கு இது தெரியவந்துள்ளது. இதன் மூலம் நூலிழையில் உக்ரைன் வீரரின் உயிர் காக்கப்பட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT