கோப்புப்படம் 
உலகம்

போலந்தின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலி

போலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

DIN

போலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலந்து நாட்டின் பாவ்லோவிஸ்ஸில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் புதன்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது.  மதியம் 12 மணியளவில் 1000 மீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயு வெளியேறிய நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வெடிவிபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்தில் சிக்கிய 7 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT