உலகம்

இலங்கைக்கு அவசர உதவி வழங்க உலக வங்கி தயார்

DIN

கொழும்பு/வாஷிங்டன்: இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு அவசரகால உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும் உலக வங்கி தயாராக உள்ளது என உலக வங்கியின் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி செய்தி ஊடகம்  ஒன்று புதன்கிழமை  தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர், இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரியுடன் செவ்வாய்கிழமை வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கொழும்பு வர்த்தமானி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர் சப்ரி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர வசந்த கால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும்,  பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதித்ததாக ஷாஃபர் கூறினார்.

ஏழைகள்  மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருள்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளது என்று ஷாஃபர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT