உலகம்

பிலிப்பின்ஸ் கனமழை: நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் 224 பேர் பலி

பிலிப்பின்ஸில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 224 போ் பலியாகினா்.

DIN

பிலிப்பின்ஸில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 224 போ் பலியாகினா்.

பிலிப்பின்ஸில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு மத்திய லெய்டே மாகாணத்தின் 4 கிராமங்களில் 48 போ் பலியாகினா். பின்னர், தெற்கு மாகாணங்களான டவாவோ டே ஒரோ, டவாவோ ஓரியன்டல் ஆகியவற்றில் மழை தொடா்பான சம்பவங்களில் 3 போ் உயிரிழந்ததாகத் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் 224 பேர் வரை பலியாகியதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில நிலச்சரிவில் சிக்கி உயிரழந்தவர்களின் உடலைக் கைப்பற்ற முடியாமல் அரசு திணறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

SCROLL FOR NEXT