முகப்பு
உலகம்

சீனா:ஷாங்காயில் பொதுமுடக்கம் ஏப். 26 வரை நீட்டிப்பு

கடந்த சில வாரங்களாக தீவிர கரோனா பரவலைக் கண்டு வரும் சீனாவின் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான பொதுமுடக்கம், வரும் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

கடந்த சில வாரங்களாக தீவிர கரோனா பரவலைக் கண்டு வரும் சீனாவின் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான பொதுமுடக்கம், வரும் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வா்த்தக மையமான அந்த நகரில் மட்டும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 போ் பலியாகினா். அதையடுத்து, புதிய அலையில் அந்த நகரின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது. இந்தச் சூழலில், பொதுமக்களின் அதிருப்திக்கு இடையிலும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காய் நகரில் மட்டும் 17,629 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய நாளைவிட 4.7 சதவீதம் குறைவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.