லண்டன்: கிழக்கு உக்ரைனைக் கைப்பற்ற ரஷியா அவசரம் காட்டுவதாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 9ஆம் தேதி ரஷியா, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாள் என்பதால், வரும் மே 9ஆம் தேதிக்குள், கிழக்கு உக்ரைனில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை ரஷியா பெற வேண்டும் என்று அந்நாட்டுன் அதிபர் விளாதிமிர் புதின் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டன் ராணுவப் படையின் அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே கூறுகையில், உக்ரைனின் கிழக்கு நகரமான டான்போஸில், எந்த வழிகள் எல்லாம் கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி ரஷிய படைகள் முன்னேறிச் செல்லும், எதிர்த் தாக்குதலுக்கு உக்ரைன் தயாராவதற்குள் இதனை செய்ய முனையும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.