அமெரிக்கா - ரஷியா இடையேகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்!
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவும் ரஷியாவும் தங்களிடமுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளன.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவும் ரஷியாவும் தங்களிடமுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், போதையில் போலீஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க ராணுவ வீரா் ட்ரெவா் ரீட் (படம்) என்பவரை ரஷியா விடுதலை செய்தது.
அதற்குப் பதிலாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2010-இல் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஷிய விமானி கொன்ஸ்டான்டின் யரொஷென்கோவை விடுவித்து தாயகம் அனுப்ப அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
அமைதி காலத்திலேயே மிக அரிதாக மேற்கொள்ளப்படும் கைதிகள் பரிமாற்றம், உக்ரைன் போரால் அமெரிக்க - ரஷிய உறவில் பதற்றம் நிலவி வரும் சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.