உலகம்

இலங்கைக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்

DIN

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில்  கடும் பாதிப்புகளை இலங்கை சந்தித்துவருகிறது.

நிதிச்சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறிவருவதால் அதிபருக்கு எதிரான போராட்டங்கள், முற்றுகைகள் என தொடர்ந்து  நடந்து வருகிறது. 

முன்னதாக, அதிபரை எதிர்த்து போராட்டங்களை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உலக வங்கி இலங்கைக்கு 600 மில்லியன் டாலர்களை (ரூ.4,500 கோடி) முதல் கட்டமாக வழங்கியுள்ளதாகவும் பிற்பாடு மேலும் 400 மில்லியன் டாலர்களை வழங்க இருப்பதாகவும் அதிபர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT