உலகம்

சிங்கப்பூா்: இருவருக்கு புதிய ரக ஒமைக்ரான்

DIN

வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

புதிய வகை கரோனாக்களைக் கண்காணிக்கும் சுகாதாரத் துறை அமைச்சக திட்டத்தின் கீழ், இருவருக்கு பிஏ.2.12.1 ரக ஒமைக்ரான் வகைக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட உடனேயே, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

பிஏ.2.12.1 துணை ரகம் கவலைக்குரியது என்றோ, கண்காணிக்கப்படவேண்டியது என்றோ உலக சுகாதார அமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீவிர தொற்றும் தன்மை கொண்ட ஒமைக்ரான் ரகமான பிஏ.2-வின் துணை ரகமான பிஏ.2.12.1, மாா்ச் மாத மத்தியில் உலகம் முழுவதும் அதிகம் பேருக்கு பரவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT