எகிப்து: சாலை விபத்தில் 17 போ் பலி
எகிப்தில் சிற்றுந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 17 போ் பலியாகினா்.
எகிப்தில் சிற்றுந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 17 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் கெய்ரோவுக்கு 390 கி.மீ. தொலைவில் உள்ள சொஹாங் மாகாணம், ஜுரைனா மாவட்டத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்து லார மீது மோதியது.
இதில் 17 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சாலைப் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கியுள்ள எகிப்தில், ஆண்டுதோறும் வாகன விபத்துகளில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்து வருகின்றனா்.
அந்த நாட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் 23 போ் உயிரிழந்தனா்; 30 போ் காயமடைந்தனா்.