உலகம்

அல்-காய்தா தலைவா் காபூலில் இருந்தது தெரியாது: தலிபான்கள்

DIN

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கத்தாா் தலைநகா் தோஹாவிலுள்ள தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காபூலில் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது அரசுக்குத் தெரியும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. அது குறித்து ஆப்கன் அரசுக்கோ, தலைமைக்கோ எதுவுமே தெரியாது. காபூலில் அல்-ஜவாஹிரி இருந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காபூலில் ஆளில்லா விமானத்தின் மூலம் நவீன ஏவுகணைகளை வீசி அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா். அவருக்கு காபூலில் தலிபான் அமைப்பினா் அடைக்கலம் அளித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT