முகப்பு
உலகம்

இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபட்ச

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச ஆகஸ்ட் 24ஆம் தேதி நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:05 AM
கோத்தபய ராஜபட்ச
பகிர்:

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச ஆகஸ்ட் 24ஆம் தேதி நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை குற்றம்சாட்டி அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் ராஜபட்ச தப்பிச் சென்றார். 

இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள இலங்கைக்கான முன்னாள் ரஷிய தூதராக பணியாற்றிய  வீரதுங்கா, “என்னிடம் தொலைபேசியில் பேசிய ராஜபட்ச அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முன்னர் இருந்தது போல் அவரால் நாட்டிற்கு சேவையாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.