உலகம்

’வாழ்க்கை பாதிக்கக்கூடாது’ கல்விக் கடன்களை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்

DIN

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக் கடன்களை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார்.

அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் கல்லூரிப் படிப்பைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு கல்விக்கடன்களை ரத்து செய்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் ஆண்டிற்கு 1,25,000 டாலருக்கும் குறைவான தனிநபர் வருமானம்  கொண்டவர்களுக்கு 10,000 டாலர் வரை கல்விக் கடன் ரத்து செய்யப்படுவதாகவும் மாத வருமானத்தில் 10%- ஆக பிடித்தம் செய்யப்பட்ட கல்விக் கடன் இனி 5 சதவீதமாகக்  குறைக்கபடும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில்,’ அமெரிக்காவில் கல்விக் கடன்கள் மூலம் கல்லூரிப் படிப்பை தொடர்பவர்கள் அதிகம். இந்நாட்டில் அனைவரும் பட்டம்பெற்று நல்ல எதிர்காலத்தை அடைய வேண்டும். ஆனால், அவர்களின் சொந்த வீடு, தொழில் போன்ற கனவுகளையும் திறன்களையும்  முடக்குவதாக கல்விக் கடன்கள் அமைந்துவிடக்கூடாது’ என ரத்திற்கான காரணத்தை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஆண்டு வருமானம் 2,50,000 டாலர் கொண்ட குடும்பங்களுக்கும் இந்த ரத்து பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT