உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

DIN

இந்தோனேசியாவின் செமெரு எரிமலை சீற்றம் காரணமாக, அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல், எரிமலை சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 2,400 கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

ராணுவத்தினர், காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், கிராம நிர்வாகிகள் என பல துறையினர், கிராம மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இப்பகுதியில் மாநில அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மூன்று வேளை உணவு அளிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலர் அடிப்படைத் தேவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீடுகளைப் பூட்டிக் கொண்டுச் செல்வதையும், சிலர் டிவி உள்ளிட்ட அதிக விலை கொண்ட பொருள்களைத் தூக்கிக் கொண்டு முகாமுக்குச் செல்வதையும் காண முடிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT