புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வருங்கால சந்ததியினரை படிப்படியாக மீட்பதற்காக, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதிக்கும் புதுமையான சட்டத்தை நியூஸிலாந்து அரசு இயற்றியுள்ளது.
இந்த சட்டத்தின்படி, இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் சிகரெட் வாங்க வேண்டுமென்றால் அவருக்கு குறைந்தது 63 வயதாவது ஆகியுள்ளது என்பதை நிரூபித்தாக வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தை புகைப்போா் அற்ற நாடாக்கும் இலக்குடன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும், அதற்கு முன்னதாகவே அந்த தீய பழக்கம் நாட்டில் படிப்படியாகக் குறைந்துவிடும் என்று சுகாதார நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
புதிய சட்டத்தின் கீழ், சிகரெட் விற்பனையாளா்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 600-ஆகக் குறைக்கப்படும். மேலும், சிகரெட்டுகளில் அனுமதிக்கப்படும் நிக்கோடின் அளவும் குறைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.