சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது.
சிலி நாட்டின் வால்பரைசோ பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காட்டுத்தீ பாதிப்பால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. வெப்ப அலைகளின் காரணமாக இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மீட்புப் படை அதிகாரிகள் இதுவரை 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டுத்தீ பாதிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.