உலகம்

பதவி விலகுவாரா எலன் மஸ்க்?

DIN

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் பதவி விலக வேண்டுமா என்பது குறித்து பதிவாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்தார்.

ட்விட்டரில் ஆம்/இல்லை என வாக்களிக்கக்கோரி பதிவிட்டுள்ளார் அதன் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்றே பெரும்பாலானோர் வாக்களித்து உள்ளனர். 

திங்கள்கிழமை(டிச.19) காலை 07:00 மணி வரை, அவரது கருத்துக்கணிப்பில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். 57% பேர் எலான் மஸ்க் பதவி விலகுவதற்கு ஆம் என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார் எலான் மஸ்க். டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

முன்னதாக, ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, 50% ஊழியர்களான சுமார் 7,500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலர் தானாகவே வெளியேறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT