உலகம்

கரோனா அதிகரிப்பால் திடீரென எலுமிச்சைக்கு வந்த பொற்காலம்

DIN

பெய்ஜிங்: சீனாவில் உள்ள சந்தைகளில் திடீரென எலுமிச்சையின் வரத்தும் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியருக்கிறது. கரோனா அதிகரிப்புக்கு எதிராக இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மக்கள் விரும்பியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு நாள்தோறும் 5 முதல் 6 டன் எலுமிச்சையே விற்பனையாகிவந்த நிலையில் தற்போது 20 முதல் 30 டன் எலுமிச்சை விற்பனையாவதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வென்ஸ் பகுதியிலிருந்து வரும் எலுமிச்சைக்கு பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் பகுதிகளில் அதீத வரவேற்பு உள்ளது. அது மட்டுமல்ல, சி வைட்டமின் நிறைந்த உணவுகளையும் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், கடந்த 4 முதல் 5 நாள்களுக்குள் எலுமிச்சை பழத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. நாடு முழுவதும் எலுமிச்சை பழங்களை அனுப்பி வைக்க இரவு பகலாக பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

வழக்கமாக காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கு எலுமிச்சை நல்ல மருந்தாக இருப்பதாகவும், அதுவும் உடல் நலம் குன்றியிருக்கும் போது எலுமிச்சை சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும் என்றும் அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT