உலகம்

சீனாவில் ஜன.8 முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து!

சீனாவில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்போவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

PTI

சீனாவில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்போவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் வூஹான் நகரில் உருவான கரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. எல்லைகள் மூடப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பை அந்நாட்டு சுகாதாரப் பட்டியலில் "ஏ" பிரிவில் வைத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது. 

முன்னதாக, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அரசு விடுதிகளில் இரண்டு வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இது படிப்படியாக மூன்று நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாள்களாகக் குறைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று சீனாவில் மீண்டும் பரவி வருவதையடுத்து, பல்வேறு செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய போராட்டங்களை அந்நாட்டு எதிர்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்து, தனிமைப்படுத்துதலில் இருந்து வெளிவரப்போவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கரோனா பாதிப்பை, சுகாதார பட்டியலில் 'ஏ' இல் இருந்து ' பி' பிரிவுக்கு சீனா மாற்றியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று, தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தானது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT