உலகம்

கால்பந்து வீரர் பீலே உடல்நிலை கவலைக்கிடம்!

கால்பந்து விளையாட்டு வீரர் பீலே உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கால்பந்து விளையாட்டு வீரர் பீலே உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

82 வயதாகும் விளையாட்டு வீரர் பீலேவுக்கு, பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது  கண்டறியப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவைச்சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நுரையீரல், இதய பிரச்னை தொடர்பான சிகிச்சைகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை மருத்துவர்களின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.  பீலேவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பீலே குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதுமிருந்து பிரார்த்தனைகள் குவிந்து வருகிறது.

உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் மூன்று முறை இடம்பிடித்தவர் பீலே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT