முகப்பு
உலகம்

பெண்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்!தலிபான்களுக்கு ஐநா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஐநா மனித உரிமைகள் தலைவர் கண்டித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:


பெர்லின்: ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்த, ஐநா மனித உரிமைகள் தலைவர், தலிபான் ஆட்சியாளர்களை உடனடியாக கட்டுப்பாடுகலைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களைத் தடுக்கும் முடிவின் விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த வாரம் தலிபான் அதிகாரிகள் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்வியைத் தடுத்தனர். இது சர்வதேச சீற்றத்தையும் ஆப்கானிஸ்தான் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து பெண்களை விலக்குவதாக அவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

எந்தவொரு நாடும் வளர்ச்சியடைய வேண்டுமெனில் உண்மையில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதன் மக்கள் தொகையில் பாதியை ஒதுக்கி வைக்க முடியாது, என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் ஜெனிவாவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் அனைத்து ஆப்கானியர்களின் துன்பத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்து ஆரம்பத்தில் உறுதியளித்த போதிலும், தாலிபான்கள் அவர்களின் இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது, மேலும், ஆடைக்கட்டுப்பாடு, பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →