உலகம்

உலகின் வெப்பமான நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை: காலநிலை மாற்றம் காரணமா?

உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் அண்மையில் பெய்த கனமழை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

DIN

உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் அண்மையில் பெய்த கனமழை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகளிலும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. பருவநிலை பிறழ்வுகளை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்துவரும் நிலையில் உலக நாடுகள் கார்பன் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் சமீபத்தில் கனமழை பெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக குவைத் நாடானது அதீத வெப்பத்துடன் காணப்படும். அந்நாட்டில் அதிகபட்சமாக 55 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் கனமழையுடன் சேர்த்து பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவது காலநிலை விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத் நாட்டில் இதுவரை பனிப்பொழிவு ஏற்படாத நிலையில் தற்போது ஆலங்கட்டி மழையுடன் கூடிய பனிப்பொழிவு பெய்து வருவது விடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

காலநிலை மாற்றம் குவைத் நாட்டின்  பருவநிலையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது விஞ்ஞானிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT