உலகம்

2023-ல் பிரிட்டனின் பிரச்னைகள் தீராது: ரிஷி சுனக்

பிரிட்டனின் பிரச்னைகள் 2023-ஆம் ஆண்டில் தீர்ந்து விடாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். 

DIN

பிரிட்டனின் பிரச்னைகள் 2023-ஆம் ஆண்டில் தீர்ந்து விடாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. அதில், பிரிட்டன் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றார். 

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: இந்த 2023-ஆம் ஆண்டில் பிரிட்டனின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என பொய்யாக கூற விரும்பவில்லை. ஆனால், இந்த 2023-ஆம் ஆண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும். ரஷிய-உக்ரைன் போர் மிகவும் சவாலாக இருக்கப்போகிறது. கரோனா பேராபத்திலிருந்து மீள்வதற்குள் உக்ரைன் மீது ரஷிய காட்டுமிராண்டித்தனமாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் இந்தத் தாக்குதல் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT