உலகம்

கரோனா: உலக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 30.17 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் 221 நாடுகளுக்கு கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30.17 கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தோரி

DIN



வாஷிங்டன்: உலகம் முழுவதும் 221 நாடுகளுக்கு கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30.17 கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 38.20 கோடியாக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38,20,44,571-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 57,05,320 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 30,17,41,935 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 7,30,24,597 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 92,640 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 9,95,59,96,883 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுது. 

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 76,516,202 ஆகவும், பலி எண்ணிக்கை 9,13,924 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,16,30,885-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,97,996 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,56,25,133 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,28,132 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பிரான்ஸ் (19,557,626), இங்கிலாந்து (17,428,345), துருக்கி (11,722,483), ரஷ்யா (11,986,913), இத்தாலி (11,116,422), ஸ்பெயின் (10,039,126 ), ஜெர்மனி (10,079,778),ஈரான் (6,408,244    ) மற்றும் கொலம்பியா (5,901,715) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT