உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 6,047 பேருக்கு தொற்று: 29 பேர் பலி 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,047 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

முந்தையநாள் தொற்று பாதிப்பு 5,327 ஆக இருந்த நிலையில், இன்று 6,047 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,436,413 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்று பாதிப்பு விகிதம் 9.9 சதவிகிதமாக உள்ளது.

தொற்று பாதித்த 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 29,330 ஆக உள்ளது. 

அதே கால இடைவெளியில் 9,590 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 13,04,980 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிந்துவில் 1,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  11 உயிரிழந்துள்ளனர், பஞ்சாபில் 1,895 பேரும், 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் 1,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  

அதோடு, பலுசிஸ்தானில் புதிதாக 84  பேரும், இஸ்லாமாபாத்தில் 575 பேரும், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT