உலகம்

ரஷ்யாவில் புதிதாக 1,41,883 பேருக்கு தொற்று: 678 பேர் பலி 

DIN


மாஸ்கோ:  ரஷ்யாவில் நேற்று தொற்று பாதிப்பு 1,25,836 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,883 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 678 பேர் இறந்துள்ளனர் என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,883 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,21,28,796 ஆக உயர்ந்துள்ளது. 678 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,32,690 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிக்கப்பட்ட 17,201 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,59,098 ஆக உள்ளது. அவர்களில் 2,300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதே காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 48,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,337,008 ஆக அதிகரித்துள்ளது என்று கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலில் ரஷ்யாவின் மோசமானப் பகுதியாக மாஸ்கோ தொடர்ந்து நீட்டித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT