போர்ச்சுகலில் கரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்தது
போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,745,383 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | வேகமாக பரவுகிறது புதிய வகை பி.ஏ.2 ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு தகவல்
Advertisement
தொற்று பாதித்தவர்களில் 2,442 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர், அவர்களில் 149 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 33,989 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஐந்து முதல் 11 வயதுக்குள்பட்ட 301,079 குழந்தைகள் உள்பட 8,798,287 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 5,061,810 பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.